“பேய் நடைமுறை“
2018 சனவரி 8ம் திகதி, “பேய் நடைமுறை“ என்றழைக்கப்படும் ஒரு குற்ற விசாரணையை, உலக தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர்கள் மேல் சுவிட்சலாந்து நீதிமன்றம் ஆரம்பிக்கும். சுவிட்சலாந்து நாட்டின் வரலாற்றிலேயே மிகப் பெரியது என்று கருதப்படும் இந்த நீதிமன்ற விசாரணை ஒரு அரசியல் சாயலைக் கொண்டிருக்கிறது. Office of the Attorney General ஆல் சுமத்தப்பட்டு, சுவிட்சலாந்து ஊடகங்களில் இக்குற்றச்சாட்டு பரப்பப்பட்டு வருகிறது. இவர்கள் தமது சகோதரங்களுக்கு பணம் அனுப்பியதாலேயே, 2009இல் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட மோசமான இப்போர் நீண்டு சென்றது என்பது இவர்கள்...