சிறீலங்காவில்நடைபெற்றஅமைதிப்பேச்சுவார்த்தைக்கு,தாம்ஆதரவுவழங்கியவரலாறைஅழித்தொழிக்கும்யேர்மனியின்முயற்சியைஉடன்நிறுத்துங்கள்!
ஈழத்தமிழ்மக்களுக்குஎதிராகஅமெரிக்காவும்ஐக்கியஇராச்சியமும்முன்னெடுக்கின்றகுற்றவியல்கொள்கைகளுக்குயேர்மனியும்ஐரோப்பியஒன்றியமும்வழங்கிவரும்ஆதரவுக்குமுடிவுகட்டுங்கள்!
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு, 2007 – 2009 வரையான காலப்பகுதியில் ஆதரவு வழங்கியதற்காக பயங்கரவாதம்தொடர்பான சட்டத்தைப் பயன்படுத்தித் தமிழீழ ஆதரவாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கின்ற யேர்மனியின் செயற்பாடு, சிறிலங்காவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக்கு யேர்மனி வழங்கிய ஆதரவு பற்றிய வரலாற்றை முற்றாக இல்லாதொழிக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. விடுதலைப் புலிகளை வடக்கிலும் கிழக்கிலும் வாழ்கின்ற தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகளென அமைதிப் பேச்சுவார்த்தை அங்கீகரித்திருந்தது மட்டுமன்றி அந்தத் தீவில் வாழ்கின்ற அனைத்து மக்களுமே நீதியுடன் கூடிய அமைதியை அனுபவிக்கக்கூடிய ஒரு வாய்ப்பையும் அது உருவாக்கியிருந்தது. அதற்குப் பதிலாக தமிழீழ ஆதரவாளர்களைக் குற்றவாளிகளாக்க யேர்மனிமுன்னெடுக்கின்ற செயற்பாடு, 2009ம் ஆண்டில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தூண்டிய அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும் இணைந்து மேற்கொண்ட அணுகுமுறைக்கு இட்டுச்சென்றது மட்டுமன்றி, இன்றும் சிறீலங்காவில் இனவழிப்பு தொடரப்படுவதற்கு வழிவகுத்திருக்கிறது.
கடந்த 2022 ஏப்பிரல் மாதம் 27ம் திகதி டுசல்டோவில் (Düsseldorf) தொடங்கிய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நால்வருள் இருவரான நாதன் தம்பி மற்றும் ஆனந்தராஜா ஆகியோர் ‘விடுதலைப் புலிகளுக்கு தாம் நிதி திரட்டியது குற்றம் அல்ல’ என்றும் அதே வேளையில் விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கும் முயற்சியை எதிர்த்தும் வாதிடுகிறார்கள். அரசியல் அளவிலானதும் சட்டம் ஊடாகவும் தமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கின்ற இவர்கள் உங்கள் ஆதரவை வேண்டிநிற்கிறார்கள்.

டுசல்டோவ்: நாதன் தம்பி மற்றும் ஆனந்தராஜாவுக்கு எதிராக ஜேர்மானிய நீதிமன்றத்தில் 2022 ஏப்பிரல் மாதம் 27ம் தேதி வழக்குத் தொடங்கிய போது நீதிமன்றத்துக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம்.
2006 இல் ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப்புலிகளைத் தடைசெய்த நிகழ்வுவானது யேர்மனி தனது கொள்கையில் சந்தித்த முக்கியமான தோல்வியாகும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா அரசுக்கும் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஐரோப்பிய ஒன்றியம் அளித்து வந்த ஆதரவு அமெரிக்க அழுத்தத்தின் காரணமாக மீளப்பெறப்பட்டது. அது அவ்வாறு நடக்காமல் இருந்திருந்தால்; இன்று சிறீலங்காவின் நிலைமை வேறாக அமைந்திருக்கும்.
பேச்சுவார்த்தை மூலம் அமைதியை அடையும் முயற்சிக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய உறுதியான ஆதரவின் காரணமாக விடுதலைப்புலிகள் அறிவித்த ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தத்துடன் இந்த அமைதிப் பேச்சுவார்த்தை ஆரம்பமானது. அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவை மேற்கொண்ட அழுத்தத்தின் காரணமாக தனது ஆதரவை மீளப்பெறுவதற்கு முன்னர் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு யேர்மனி வழங்கிய ஆதரவு முக்கியமானது. காரணம் என்னவென்றால் பேச்சுவார்த்தைக்கு முன்னர் யேர்மனி விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகளாகவே சித்தரித்திருந்தது.
அமைதிப்பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் பிரித்தானியர்களால் கட்டமைக்கப்பட்ட சிறீலங்கா அரசின் குரூரமான இன அடக்குமுறைகளுக்கு எதிராகப் பல பத்து ஆண்டுகளாகப் போராடி வந்த தமிழ் மக்களுக்குப் பாரம்பரியமாகச் சொந்தமாக இருந்த நிலங்களில் அண்ணளவாக 75 வீதமானவை விடுதலைப்புலிகளாலேயே நிர்வகிக்கப்பட்டுவந்தன. இருந்த போதிலும் மூலோபாய அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அந்தத் தீவில், தமிழ் மக்களும் சிங்கள மக்களும் தமது இறைமையைப் பகிர்ந்துகொள்ளக்கூடிய சூழலை உருவாக்கக்கூடிய ஒரு தீர்வை அமெரிக்கா அறவே விரும்பவில்லை.
குறிப்பிட்ட இந்தப் பிரதேசங்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்குமாக இருந்தால் இந்தத் தீவை இராணுவத்தளமாக அமெரிக்கா எவ்வகையிலும் பயன்படுத்த முடியாத ஒரு சூழல் ஏற்படும். (அமெரிக்காவுக்கு சிறீலங்கா எவ்வகையில் மூலோபாய அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தொடர்பான ஊடகவியலாளர்சிவராமின் செவ்வியைப் பார்க்கவும்)
அமைதிப் பேச்சுவார்த்தையைத் திட்டமிட்ட வகையில் தோல்வியுறச் செய்த அமெரிக்கா, 2006ம் ஆண்டு May மாதத்தில் தனது அழுத்தத்தின் மூலம் விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கும் முயற்சியில் வெற்றிகண்டதுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிவந்தஆதரவும் மீளப்பெறப்பட்டது. (கீழுள்ள குறிப்பைப் பார்க்கவும்).
முன்னர் எதிர்வுகூறப்பட்டது போன்று, விடுதலைப்புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையைத் தொடர்ந்து, அமைதி முயற்சியை முற்றுமுழுதாகக் கைவிட்ட சிறீலங்கா அரசு, விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தை அழித்தொழிக்கவும் அந்தத் தீவில் வாழ்கின்ற ஏனைய சமூகங்களுடன் இணைந்து தமிழ் மக்கள் மாண்புடன் வாழ்கின்ற வாய்ப்பை அழித்தொழிக்கவும் பன்னாட்டு அரசுகளின் உதவியுடன் ஆக்ரோசமான ஓர் போரை முன்னெடுத்தது. அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு எதிராக இராசதந்திர அளவிலும், அரசியல் நிலைப்பாட்டிலும் அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகளே பின்னர் தொடர்ந்து வந்த இனவழிப்பைத் தூண்டிய பெருங்குற்றமாகும். (இனவழிப்புக் குற்றம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வைப்பற்றி அறிவதற்கு சிறீலங்கா பற்றி நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் வெளியிட்ட அறிக்கையைப் பார்வையிடவும்).
விடுதலைப்புலிகள் அமைப்பை ஒரு வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்பாக்கி, அதற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு யேர்மானிய நீதி அமைச்சுக்கு 2010 இல் யேர்மனி வழங்கிய அதிகாரம், யேர்மனி கடைப்பிடித்து வந்த கொள்கையில் மேலும் ஒரு தோல்வியாகும்.
2006ம் ஆண்டில் ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக ஓர் புதிய போரை சிறீலங்கா அரசு தொடுத்த பொழுது, அந்த மக்களுக்கு எதிரான கொடுமையான செயற்பாடுகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. அதே வேளையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான அமெரிக்காவின் நிலைப்பாடும் இன்னும் ஆழமான நிலைக்குச் சென்றது. விடுதலைப்புலிகளின் நிர்வாகத்துக்குப் பணமோ அல்லது ஆயுதங்களோ சென்று சேர்வதைத் தடுப்பதற்கென அமெரிக்கா பல ‘தொடர்புக்குழுக்களை’ உருவாக்கியது (விக்கிலீக்சில் இவற்றைக் காணலாம்).
இந்நிகழ்வுகளின் தொடர்ச்சியாக அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரான்சு, இத்தாலி, ஐக்கிய இராச்சியம் போன்ற ஈழத்தமிழ் அகதிகள் பெரும் எண்ணிக்கையில் வாழ்கின்ற மேற்கு நாடுகள் பலவற்றில் விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களுக்கு எதிராகக் கைதுகளும் தீடீர்ச்சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இது எவ்வாறிருப்பினும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைக்கு யேர்மனி தனது ஆதரவை வழங்கிய போதிலும், ஈழத் ஆதரவாளர்களை இவ்வாறு யேர்மனி அப்போது கைதுசெய்யவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை இயல்பாகவே அமுல் நடத்த வேண்டிய தேவை ஜேர்மனிக்கு இருக்கவில்லை. அதுமட்டுமன்றி விடுதலைப்புலிகளைப் பயங்வரவாதிகளாக யேர்மனி நோக்குகின்றது என்பது தொடர்பான எந்தவித சமிக்ஞையும் அவ்வேளையில் தென்படவில்லை .
ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகளைத் தடைசெய்வதற்குச் சரியாக ஒரு வருடத்துக்கு முன்னரே, விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளை தனது நாட்டுக்கு யேர்மனி அழைத்திருந்தது. போர் மீண்டும் தொடங்கப்பட்ட பின்னர், அமெரிக்காவைப் போலன்றி, சிறீலங்கா அரசுக்கு நிதியுதவி அளிப்பதில்லை என்ற நிலைப்பாட்டுக்கு யேர்மனி தனது ஆதரவை வழங்கியிருந்தது. 2009 இல் விடுதலைப்புலிகளால் நிர்வகிக்கப்பட்ட பிரதேசங்களில் படுகொலைகள் அதிகமாக இடம்பெற்ற போதும்மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்த இனவழிப்புக்கு எதிராக தமிழ் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்த போதும், பிரான்சில் நூற்றுக்கணக்கான ஈழத் தமிழ் ஆதரவாளர்கள் கைதுசெய்யப்பட்ட பொழுதும், யேர்மனிய அரசு அவற்றை எந்தவிதத்திலும் தடைசெய்யவில்லை (2009 ஏப்பிரலில் டுசல்டோவ் விமானநிலையத்துக்குச் செல்லும் பெருந்தெருவை மக்கள் இடைமறித்த போது).
யேர்மனிய அரசின் கொள்கையில் 2010;ம் ஆண்டில் ஒரு முக்கியமான மாற்றம் ஏற்பட்டது. முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட நிகழ்வு முற்றுப்பெற்றுச் சில மாதங்களே ஆன சூழலில், சுதந்திரத்துக்கான தமிழ் மக்களின் நம்பிக்கை அனைத்தும் தவிடுபொடியாக்கப்பட்டு, தமது உறவுகள் கொடுமையாக கொல்லப்பட்டதனால் உளவியல் அளவில் தமிழ் மக்கள்மிகவும் பாதிக்கப்பட்டிருந்த ஒரு கணப்பொழுதில், தனது நாட்டில் வசித்து வந்த ஈழ ஆதரவாளர்கள் மட்டில்திடீர்ச்சோதனைகளையும் கைதுகளையும் யேர்மனி மேற்கொண்டது. அப்போது கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராகத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த போது வழக்குகள் தொடுக்கப்பட்டு, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளித்ததற்காக அவர்களுக்குப் பல ஆண்டுகள் சிறைத்தண்டனைகளும் வழங்கப்பட்டன. அன்றிலிருந்து,
இவ்வாறான வழக்குகள் யேர்மனியில் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சிறீலங்காவின் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் உத்தியோகபூர்வமான தலைவராகப் பணியாற்றிய ஊல்வ் ஹென்றிக்சனின் கூற்றுப்படி, விடுதலைப்புலிகளைத் தடைசெய்வதென தனது பொதுவான வெளிநாட்டு மற்றும் பாதுகாப்புக் கொள்கையின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் எடுத்த முடிவு,பிரஸ்ஸெல்சில் தேநீர் அருந்தும் இடங்களில் எடுக்கப்பட்ட மிகவும் உயர்மட்ட முடிவாகும்.
(சிறிலங்காவில் உள்ள பன்னாட்டுச் சமூகமும், போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவும் பல்வேறு தூதரகங்களும், ஐக்கிய நாடுகளும் புலிகளைத் தடைசெய்ய வேண்டாம் என்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் சொன்னோம். ஆனால்.. அதற்கு மாறாக அனைத்தும் மிக விரைவாகவே நடைபெற்று முடிந்துவிட்டன. உங்களது இந்த முடிவுக்குப் பின்னால் அமெரிக்கா இருக்கிறது என்பது புலனாகிறது. இந்தத் தடையைக் கொண்டுவருவதற்கு அமெரிக்காவிடமிருந்தும் ஐக்கிய இராச்சியத்திடமிருந்தும் அதிக அழுத்தங்கள் வந்திருக்கின்றன. ஆனால் இது ஓர் நல்ல முடிவு அல்ல என்று எண்ணும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சார்ந்த உயர்மட்ட அரசியல்வாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்)
இவ்வாறு புலிகளை அழிப்பதற்கு அமெரிக்காவும் ஐக்கியஇராச்சியமும் இணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டத்தை தமக்கு வேண்டிய விதத்தில் கையாண்டிருக்கின்றன. யேர்மனிய சட்டம் இவ்வாறு கையாளப்பட்ட விதமும், 2010ம் ஆண்டில் யேர்மனியில் மேற்கொள்ளப்பட்ட கைதுகளும் சிறீலங்கா அமைதிப் பேச்சுவார்த்தை ஒருபோதுமே நடைபெற்றிருக்கவில்லை என்றும் அமைதிப் பேச்சுவார்த்தைக் காலத்தில் விடுதலைப்புலிகள் பெற்றுக்கொண்ட அடைவுகள் என்று எதுவுமே இல்லை போன்றதுமான ஒரு திரிபை வரலாற்றில் ஏற்படுத்தியது. யேர்மனி முன்னெடுத்த இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சிறீலங்கா தொடர்பாக அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும் வரித்துக்கொண்ட தமது கொள்கைக்கு இணங்கிச் செல்வதாக அமைந்திருந்தது மட்டுமன்றி, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து தம்மை அந்நியப்படுத்திக்கொள்ள தாயகத்திலும் புலம்பதிந்து தமிழ் மக்கள் வாழுகின்ற நாடுகளிலும் உள்ள தமிழ்மக்கள் தூண்டப்பட்டனர்.
2022 – தமிழீழச் செயற்பாட்டாளர்களான நாதன் தம்பியும் ஆனந்தராஜாவும் விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதப்பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கு எதிராக யேர்மனிய நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்துள்ளனர். 2009 இல் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பினால் நம்பிக்கையிழந்திருக்கும் தமிழ் மக்கள், ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான ஓர் போர் தற்போது யேர்மனியில் முன்னெடுக்கப்படுவதாக உணர்கின்றனர். இவ்வாறான பின்புலத்தில், இவ்வாறான வழக்கு விசாரணைகளின் போது ஒரு குறைந்தபட்ச தண்டனையைப் பெற்றுக்கொள்வதற்காக சமரசத்துக்கு இணங்கும் படி இந்த ஆதரவாளர்கள் அழுத்தத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஓர் திறந்த நீதிமன்றத்தில் விடுதலைப்புலிகள் தொடர்பாக தாம் ஒருநிலைப்பாட்டை எடுக்கும் பட்சத்தில் தாயகத்தில் எந்தவித பாதுகாப்பும் இன்றி வாழுகின்ற தமது உறவுகளுக்குத் தீங்கு நேரிடக்கூடும் என்றும் இந்த ஆதரவாளர்கள் அச்சமடைகின்றனர்.
இருப்பினும், ஏப்பிரல் 2009இல் தொடங்கப்பட்ட மிக அண்மைக்கால வழக்குகளில் நான்கு பிரதிவாதிகளில் இருவரான நாதன் தம்பியும் ஆனந்தராஜாவும இந்த சமரச நிலைப்பாட்டிலிருந்து முற்றாக விலகி, 2007-2009 காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கென நிதியைச் சேகரித்தது ‘தண்டனைக்குரிய ஓர் குற்றம் அல்ல’ என வாதிடுகின்றனர். ‘விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் ‘; எனக்குத்தப்படும் அநீதியான முத்திரைக்கு எதிராகப் போராட இவ்விருவரும் துணிந்துவிட்டனர்.
விடுதலைப்புலிகளை இவ்வாறாகப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கும் முடிவு சட்டபூர்வமானது அல்ல என்றும், சிறீலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற ஒரு முக்கிய அமைதிப்பேச்சுவார்த்தைக்கு ஊறு விளைவித்த ஒரு அரசியல் நோக்கங்கொண்ட ஒரு நடவடிக்கை இது என்றும் இவர்கள் வாதிடுகின்றனர். இந்த இருவரும் விடுதலைப்புலிகளிடமிருந்து தம்மை அந்நியப்படுத்துவதற்கு மறுப்புத் தெரிவித்தது மட்டுமன்றி, அப்படிச்செய்வது விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கும் முயற்சியை நியாயப்படுத்துவதாக அமையும் என்றும் கருதுகின்றனர். அதற்குப் பதிலாக விடுதலைப்புலிகள் ‘தமிழ் மக்களின் நியாயபூர்வமான ஒரு விடுதலை அமைப்பு’ என்பதையும் இவர்கள் இடித்துரைக்கின்றனர் . அமைதிப்பேச்சுவார்த்தையை முன்னெடுக்க உதவிய போது, யேர்மனியும் இதே நிலைப்பாட்டையே கொண்டிருந்தது. புலிகளைப் பயங்கரவாதிகளாகப் பார்ப்பது தான் உண்மையான குற்றம் என இவர்கள் இருவரும் வாதிடுகின்றனர். அவ்வாறு புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்ப்பது தமது இனவழிப்புக் கொள்கைகளைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கு சிறீலங்கா அரசுக்குக் காட்டும் பச்சைக்கொடி என்றே இவர்கள் அதனை நோக்குகின்றனர்.

பேர்லின்: விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளும் ஜேர்மன் வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகளும் 2004 ஒக்ரோபரில் சந்திக்கும் நிகழ்வு (விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளரான தமிழ்ச்செல்வன், அரச செயலர், பொருண்மிய ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான ஜேர்மன் சமஷ்டி அமைச்சு, திரு.எரிக் ஸ்ராதர் மற்றும் அரச அமைச்சர். (2007 நவம்பரில் சிறிலங்கா அரசால் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார்).
நாதன் தம்பியும் ஆனந்தராஜாவும் எடுத்திருக்கும் இந்தக் கொள்கை நிலைப்பாடு, தமிழ் மக்களை இனவழிப்புச் செய்வதற்கு சிறீலங்கா அரசைத் தூண்டுகின்ற சட்டபூர்வமான மற்றும் அரசியல் அடிப்படையிலான அடித்தளத்தைக் கொடுக்கின்றதெனக்கூறி, விடுதலைப்புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையைக் கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையும், அதே போல புலிகளுக்குப் பயங்கரவாத முத்திரையைக் குத்துகின்ற யேர்மானிய நீதிக்கட்டமைப்பின் செயற்பாடும் 2006ம் ஆண்டிலிருந்து ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போரை நியாயப்படுத்தி வருகின்றன. 2009 இல் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட படுகொலைகளை மட்டுமல்ல, மிக மோசமான பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் எவ்வித காரணமும் இன்றித் தடுத்து வைத்தல், சித்திரவதை, பாலியல்வன்புணர்வு, போன்றவற்றையும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் இராணுவமயமாக்கல், சிங்களக்குடியேற்றத்திட்டங்கள், தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய நிலங்களில் நடைபெறும் நில அபகரிப்புகள், தமது வரலாற்றை நினைவுகூர்வதற்கான ஈழத்தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்படுதல் போன்றவற்றையும் யேர்மனிய அரசு இதனூடாக நியாயப்படுத்தி வருகிறது.
இனவழிப்புக்கெதிராகப் போராடிய வேளையில் வீரச்சாவடைந்தவர்கள் , மற்றும் சிறீலங்கா அரச படைகளினால் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்தல் போன்றவற்றையும் நியாயப்படுத்திவருகின்றன. இவ்வாறான வன்முறைகளைத் தொடர்வதற்கான பச்சைக்கொடியைக் காட்டுவதற்குப் பதிலாக கடந்த காலத்திலும், இன்றும் ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் அநீதிகளுக்குக் காரணமாக இருக்கின்ற அமெரிக்க கொள்கைக்கு எதிராகவும் யேர்மனி தனது எதிர்ப்பைப் பதிவுசெய்ய வேண்டும். ஓர் அரசியல் நோக்கத்துக்கு ஏற்றவாறு சட்டத்தைத் தாம் விரும்பிய வகையில் பயன்படுத்துதல் உண்மையில் குற்றமாகும்
ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான திடீர்ச்சோதனைகளும் கைதுகளும் 2010ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் திகதி முன்னெடுக்கப்பட்டன. (இக்கைதுகளுக்கான பிடியாணைகள் 2009 டிசம்பர் மாதம் 16ம் திகதி வழங்கப்பட்டன ). இவ்வாறாகக் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராக முதலில் யேர்மனியில் உள்ள பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டங்களின் அடிப்படையில் குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால் இதற்கு எதிராக யேர்மானிய நீதிமன்றங்களில் மேன்முறையீடு செய்யப்பட்ட போது, விடுதலைப்புலிகள் அமைப்பை யேர்மனியைப் பொறுத்த வரையில் ஒரு உள்நாட்டு பயங்கரவாத அமைப்பாக பட்டியற் படுத்த முடியாது என்ற காரணத்தால்அவ்வாறு குற்றஞ்சுமத்துதல் சட்டபூர்வமானது அல்ல என நிரூபிக்கப்பட்டது . கைதுசெய்யப்பட்டவர்களை சிறையில் தொடர்ந்து வைத்திருக்க சட்டக்கோவையின் வேறு ஒரு பகுதியைப் பயன்படுத்தி அவர்கள் மீதுகுற்றஞ்சுமத்தும் முடிவு அவசரஅவசரமாக எடுக்கப்பட்டது.
2010ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 14ம் திகதி இவ்விடயத்தில் ஒரு தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம், வெளிநாட்டைச் சேர்ந்த ஓர் பயங்கரவாதக் குழுவுக்கு ஆதரவு வழங்கியவர்கள் என்ற அடிப்படையில் யேர்மானிய சமஷ்டி நீதி அமைச்சு வழக்கைத் தொடு;க்க வேண்டும் அன்றேல் பிரதிவாதிகள் ஒரு கிழமைக்குள் விடுதலைசெய்யப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
இருப்பினும் இவ்வாறான வழக்குகளைத் தொடுப்பதற்கான வாய்ப்பை வழங்கும் சட்டங்களைப் பொறுத்தவரையில் நியாயபூர்வமான விடுதலை அமைப்புகளின் ஆதரவாளர்களைப் பாதுகாப்பது அவற்றின் நோக்கங்களில்ஒன்றாக இருந்தது (பகுதி 129D சட்டம் ). ‘மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் ஓர் அரசுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தமது செயற்பாடுகளை முன்னெடுத்தனரா இல்லையா’ என்பதை மதிப்பீடு செய்யவும் வழக்குத்தொடர்பான அனைத்துப் பின்புலங்களையும் நீதி அமைச்சு ஆய்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. சிறீலங்கா அரசால் நீண்ட காலமாக இழைக்கப்பட்டு வரும் குற்றங்களைப் பார்க்கும் போதும்,
முன்னெப்போதும் இல்லாத வகையில் அந்த அரசால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளைப் பார்க்கும் போதும் ; சட்டத்தின் இந்த சரத்தில் குறிப்பிட்டவாறு தமிழீழ விடுதலைப்புலிகள் மனித உரிமைகளை மதித்த அரசுக்கு எதிராக தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது தெளிவாகும்.
மேலும்; 2009ம்ஆண்டுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் மேற்கொண்ட செயற்பாடுகள் தொடர்பான முடிவு 2010ம் ஆண்டே எடுக்கப்பட்டது. அவ்வாறாயின் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் (TRO) போன்ற அமைப்புகளுக்கு நிதிவழங்குவதும் யேர்மனியில் ஒரு சந்திப்புக்காக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்கு வசதியை ஏற்படுத்திக்கொடுத்ததையும் பார்க்கும் போது, ‘யேர்மனி ஒரு வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவை வழங்கியதா?’ என்ற கேள்வி எழுகின்றது.

கிளிநொச்சி: இடப்பெயர்ந்த 110க்கு அதிகமான குடும்பங்களுக்காகக் கட்டப்பட்ட வீட்டுத்திட்டத்தின் திறப்பு விழா (2005 ஜூன் 30). ஜேர்மானியத் தொழில்நுட்பச் சங்கத்தின் (புவுணு) ஊடாக ஜேர்மானிய அரசினால் வழங்கப்பட்ட நிதியுதவி மூலம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் (வுசுழு) இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வழக்குகளுக்கான சட்டபூர்வமான நியாயத்தன்மை பற்றி யேர்மானிய நீதியமைச்சின் முடிவுகள் தொடர்ந்தும் மறைவாகவே வைக்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும், யேர்மனி மீதும் ஐரோப்பிய ஒன்றியம் மீதும் பிரயோகித்த அரசியல் அளவிலான அழுத்தமே, தமிழீழ விடுதலைப்புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம்தடைவிதிப்பதற்குக் காரணமானது என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது என்ற போதிலும், 2009ம் ஆண்டில் ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராகப் படுகொலைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரும் கூட இந்த அழுத்தங்கள் எவ்வாறு தொடர்கின்றன என்னும் விடயம் இன்னும் மறைவாகவே இருக்கின்றது.
தாம் வழங்குகின்ற சாட்சியம், யேர்மனிக்கும் ஏனைய ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கின்ற ஏனைய நாடுகளுக்கும் இடையேயுள்ள உறவைப் பாதிக்கும் என்று கூறி, வெளிநாட்டு அமைச்சைச் சார்ந்த இரண்டு அதிகாரிகள் சாட்சியம் வழங்க முன்வந்த போதும் வெளிநாட்டு அமைச்சினால் அவர்கள் தடுக்கப்பட்ட போதும், இவ்வாறான வழக்குகளுக்குப் பின்னால் எவ்வாறான அரசியல் சக்திகள் செயற்படுகின்றன என்பது ஓரளவுக்கு வெளிப்பட்டது. (2018ம் ஆண்டில் இவ்வாறான வழக்குகள் சுவிற்சர்லாந்தில் தொடுக்கப்பட்டபோது, பிரித்தானிய புலனாய்வு அமைப்புகளின் தலையீடுகள் தொடர்பான செய்திகள் அப்போது வெளிவந்தன).
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக வழக்குத் தொடுப்பதில் உள்ள நியாயத்தன்மை தொடர்பாக 2010ம் ஆண்டில் சமஷ்டி நீதி அமைச்சு எடுத்த முடிவுகளை முழுமையாக வெளியிடும்படி நாதன் தம்பியின் 2022ம் ஆண்டு வழக்கில் சமூகமளித்த சட்டத்தரணி வேண்டுகோளை முன்வைத்த போது அந்த வேண்டுகோளுக்கு மறுப்புத்தெரிவிக்கப்பட்டது. நீதி அமைச்சு வழங்கிய அனுமதியின் செல்லுபடித்தன்மையை ஆய்வுசெய்வது இதனால் இயலாததாகின்றது . இந்த வழக்குத் தொடர்பான இறுதி முடிவை எடுப்பதற்கு முன்னர் அவ்வாறு அனுமதி வழங்கியது தவறு என்று கூறும் அதிகாரம் சமஷ்டி அமைச்சுக்கு நிச்சயமாக இருக்கிறது.
உலகத்தமிழ் உறவுகள் இணைந்து நடவடிக்கையை மேற்கொள்ளுதல்
2010ம் ஆண்டில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக வழக்குகளைத் தொடரமுடியும் என்பதற்கு நீதி அமைச்சு கூறிய காரணங்கள் தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அந்த அமைச்சு மீது அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளை முன்னெடுங்கள் என்று தனிநபர்களுக்கும், அமைப்புகளுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். நாங்கள் மேலே முன்வைத்த காரணங்களுக்கு அமைவாக வழங்கப்பட்ட அனுமதி தவறானது என்பதை ஏற்றுக்கொள்ளுமாறு யேர்மனிய நீதி அமைச்சையும் நாங்கள் கோருகின்றோம் . இந்த வழக்குத் தொடர்பான இறுதித்தீர்ப்பு வழங்கப்பட முன்னர் அதாவது ஒரு மாதத்துக்குள் இச்செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும். அப்போது தான் அவை சட்டபூர்வமானவையாக அமையும்.
நீங்கள் எடுக்கும் நடவடிக்கை தொடர்பான செய்திகளை எமக்கு மின்னஞ்சல் ( imrvbremen@gmail.com) செய்யுங்கள். நாங்கள் அவற்றை https://twitter.com/imrv_bremen, https://www.facebook.com/imrvbremen/ , instagram: www.instagram.com/IMRVbremen
என்ற முகவரியில் பதிவேற்றம் செய்வோம். அல்லது Twitter போன்ற சமூக வலைத்தளங்களில் குறியீடு (Tag) செய்யுங்கள்
எதிர்வரும் August மாதத்துக்குள் பின்வரும் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு வேண்டுகிறோம்.
– காணொளிச் செய்திகள்
– ஒளிப்படச்செய்திகள்
– சமூக வலைத்தளப் பதிவுகள்
– கடிதங்கள் (ஆவணங்களை எமக்கு மின்னஞ்சல் செய்யுங்கள் நாங்கள் அவற்றை தொலைநகல் மூலம் அனுப்பிவைப்போம்)
– யேர்மனியத் தூதரகங்களின் முன்னால் ஆர்ப்பாட்டங்கள்
நாதன் தம்பி மற்றும் ஆனந்தராஜா ஆகியோர் வழக்குகளைத் தொடர்ந்து முன்னெடுக்க எமக்கு சட்டபூர்வமான ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்கக்கூடிய சட்டச்செயற்பாட்டாளர்களையும் நிபுணர்களிடமும் நாம் உதவி கோரிநிற்கின்றோம்
ஜேர்மன் சமஷ்டி நீதியமைச்சு
மின்னஞ்சல் : poststelle@bmjv.bund.de, Twitter : www.twitter.com/bmj_bund, Facebook : www.facebook.com/bundesjustizministerium, Instagram : www.instagram.com/bundesjustizministerium
ஜேர்மன் சமஷ்டி நீதி அமைச்சர் மார்க்கோ புஷ்மன்
மின்னஞ்சல் : marco.buschmann@bundestag.de, Twitter : www.twitter.com/MarcoBuschmann, Facebook : www.facebook.com/MarcoBuschmannFDP, Instagram : www.instagram.com/marcobuschmann
யேர்மனிய தூதரகங்கள் அமைந்திருக்கும் இடங்களுக்கான பட்டியல் :
https://www.auswaertiges-amt.de/en/about-us/auslandsvertretungen/deutsche-auslandsvertretungen
குறிப்பு: ஐரோப்பிய ஒன்றியத்தை தமக்குச் சார்பாக மாற்றுவதற்கு அமெரிக்கா மேற்கொண்ட பரப்புரை தொடர்பான விடயங்களின் ஒரு பகுதி விக்கிலீக்சால் வெளியிடப்பட்ட இராசதந்திர தகவற்பரிமாற்றங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2005 செப்டம்பர் மாதத்துக்கும் 2006 மே மாதத்துக்கும் இடையே 13 ஐரோப்பிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட 20 வெவ்வேறான சந்திப்புகள் தொடர்பான தகவல்கள் இங்கே தரப்பட்டிருக்கின்றன.
‘உங்களது இந்த முடிவுக்குப் பின்னால் அமெரிக்கா இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். இதனை மேற்கொள்வதற்கு அமெரிக்காவிலிருந்தும் ஐக்கிய இராச்சியத்திடமிருந்தும் அதிக அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இது ஒரு நல்ல முடிவு அல்ல என்று எண்ணுகின்ற உயர்மட்ட ஐரோப்பிய ஒன்றிய அரசியல்வாதிகளும் இருக்கத் தான் செய்கிறார்கள்’ என்று சுவீடன் நாட்டின்முன்னாள் இராணுவத் தளபதியும் அந்நாள் சிறிலங்கா போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவருமான ஊல்வ் ஹென்றிக்சன் பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.
‘வெளிநாட்டு அமைச்சராக நான் பணிபுரிந்த பொழுது, ஐரோப்பாவில் விடுதலைப்புலிகளைத் தடைசெய்வதற்கு அமெரிக்கா எமக்குச் செய்த உதவிகளை நாம் மறந்துவிட முடியாது’ என்று 2012 இல் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார். அப்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகித்த 25 நாடுகளில் 7 நாடுகள் விடுதலைப்புலிகள் மீதான தடையை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் இதனை ஓர் ஏகமனதான முடிவாக ஐரோப்பிய ஒன்றியத்தால் மேற்கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக அப்போது அமெரிக்காவின் இராசாங்க அமைச்சராகப் பணியாற்றி கொண்டொலீஸா றைஸ் ஐ பல தடவைகள் நான் சந்தித்ததுடன் துணை இராசாங்க அமைச்சராகப் பணிபுரிந்த நிக்கொலஸ் பேண்ஸ் என்பவரது பணிமனையின் உதவியுடன் 2006ம் ஆண்டு MAY மாதம் 29ம் திகதி, விடுதலைப்புலிகளைத் தடைசெய்வதற்கான ஆதரவை அந்த 7 நாடுகளிடமிருந்தும் பெற்றுக்கொண்டோம் .
இந்த அமைதிப் பேச்சுவார்த்தையினால் பல மனிதாபிமான நன்மைகள் அடையப்பட்ட போதும், இந்த பேச்சுவார்த்தைக்கு அனைத்துச் சமூகங்களிடமிருந்தும் ஆதரவு கிடைக்கப்பெற்ற போதும்,ஈழத்தமிழ் மக்களுடன் இறைமையைப் பகிர்ந்துகொள்ள சிறீலங்கா அரசு எடுத்த ஒவ்வொரு அடியும் 2003ம் ஆண்டு April மாதத்தில் வோசிங்ரன் டி.சி.யில் நடைபெறவிருந்த நிதி வழங்குநர் மாநாட்டில் விடுதலைப்புலிகள் பங்குபெறுவது தடைசெய்யப்பட்டதுடன் தோல்விக்கு உள்ளாக்கப்பட்டது.
விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையே ‘சமமான மதிப்பை’ ஐரோப்பிய ஒன்றியம் பேணிய போதிலும், வெளிநாட்டு உறவுகளுக்கான ஐரோப்பிய ஆணையாளர் விடுதலைப்புலிகளின் தலைவரான பிரபாகரனை 2003இல் சந்தித்ததற்காக ஐரோப்பிய ஒன்றியத்தை தனிப்பட்ட விதத்தில் அமெரிக்கா கண்டனம் செய்தது. ‘சிறீலங்கா அரசுக்கு இணையாக விடுதலைப்புலிகள் மதிக்கப்படக்கூடாது’ என்று அந்நேரம் அமெரிக்காவின் துணை இராசங்கச் செயலரான றொக்கா குறிப்பிட்டிருந்தார். (விக்கிலீக்சைப் பார்க்கவும்).
2004ம் ஆண்டு December மாதத்தில் ஆழிப்பேரலை அனர்த்தம் தென்னாசிய நாடுகளில் பேரழிவை ஏற்படுத்திய போது, தமிழீழ விடுதலைப்புலிகளும் சிறீலங்கா அரசும் இணைந்த ஒரு உதவி வழங்கும் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் ஆழமாக ஊக்குவித்தது. இதன் தொடர்ச்சியாக சிறீலங்காவின் அதிபருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையே ஆழிப் பேரலைக்குப் பின்னரான மேலாண்மைக் கட்டமைப்பு (P-Toms ) 2005 ஜூன் மாதம் 25ம் தேதி ஒப்பமிடப்பட்டதுடன் இதற்கான தனது ஆதரவை உறுதிப்படுத்திய ஐரோப்பிய ஒன்றியம் கணிசமான நிதியையும் வழங்க முன்வந்தது. ஆனால் அதே நேரம் அமெரிக்கா அதற்கு ஆதரவு வழங்க மறுத்தது.