சுவிட்சலாந்து அகதி ஈழத்தமிழருக்கான செல்ஃபி போராட்டம் –
இலங்கை தீவில் போர் நீண்டு சென்றதற்கும், அது கொடூரமாக நடத்தப்பட்டதற்கும் புலம்பெயர் தமிழர் காரணமா?
சுவிஸ் நீதிமன்றம் முடிவு செய்யும்.
2018 சனவரி 8ம் திகதி, சில ஈழத்தமிழர்களுக்கு எதிராக சுவிட்சலாந்தில் வழக்கு ஆரம்பமாகியது. சுவிட்சலாந்து வரலாற்றிலேயே மிகப்பெரிய வழக்காக கருதப்படும் இவ்வழக்கு ஒரு அரசியல் சாயலை எடுத்துள்ளது. சுவிட்சலாந்து Office of the Attorney General சர்ச்சைக்குரிய ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறது. சுவிட்சலாந்தில் வாழும் ஈழத்தமிழ் அகதிகள் நிதி சேகரித்து தாயகத்திற்கு அனுப்பியதால், அங்கு போர் நீடித்து, அது கொடூரமாக நடத்தப்பட்டது. இதனால் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் அவர்களின் உறவுகளின் 2009 இறப்புகளுக்கு பொறுப்பாகிறார்கள்.
2009 பாரிய படுகொலைகள் சர்வதேச அரங்கில் மறைக்க முடியாதது. ஐநா செயலாளர் நாயகத்தால் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை 70,000 தமிழர்கள் (100 வீதம் சிங்களவர்கள் கொண்ட படையால்) இம்மாதங்களில் கொல்லப்பட்டார்கள் என்றது. 2009 படுகொலைகளுக்கு முன்னரே, தம்மால் முடிந்தளவு, தாயகத்திலுள்ள தமது உறவுகளுக்கு புலம்பெயர் ஈழத்தமிழர்கள் உதவ முயற்சித்தார்கள். 2009 அழிவுக்கு பின்னர், இவ்வழிவுகளை ஒரு இனவழிப்பாக சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கடும் முயற்சிகள் எடுத்து வருகிறார்கள்.
சுவிட்சலாந்து நீதிமன்றம் குற்றம் சுமத்தப்பட்ட ஈழத்தமிழர்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தால், இனவழிப்பு செய்தவர்களுக்கு ஒரு முக்கியமான புதிய ஆயுதம் கையில் கிடைக்கும். சிறிலங்கா அரசும் அதன் வெளி ஆதரவார்களும், சுவிஸ் தீர்ப்பை காட்டி, 2009 அழிவுகளுக்கு தாங்கள் அல்ல தமிழரே காரணம் என்று சொல்லலாம்.
இவ்வாறு வரலாற்றை தலைகீழாக மாற்றி எழுதும் முயற்சி வெற்றிபெற நாம் விடக்கூடாது. உலகெங்கிலும் உள்ள மக்கள் இதை எதிர்க்க வேண்டும்.
நீங்கள் என்ன செய்யலாம்:
வழக்கு மார்ச் மாதம் முதலாம் கிழமைவரை மட்டுமாதல் தொடரும்.
இவ்வழக்குக்கு எதிராக நீங்கள் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்கலாம்.
உங்கள் கையால் உங்களுக்கு விருப்பமான மொழியில் உங்கள் நகரத்தின் மற்றும் நாட்டின் பெயர்களுடன் எழுதிய பதாகையை பிடித்த உங்கள் செல்ஃபி போட்டோ எடுத்து அனுப்பலாம் (உங்கள் பதாகையில் உள்ள வார்த்தைகளை வசனமாகவும் அனுப்புங்கள்.)
பதாகையில் போடக்கூடிய வாசகங்கள்…
சுவிட்சலாந்தே – முள்ளிவாய்கால் படுகொலைகளுக்கு தமிழர்களை குற்றம்சாட்டாதே – சிறிலங்கா அரசின் மேல் குற்றம் சுமத்து.
முள்ளிவாய்கால் – ”தற்கொலையல்ல இனவழிப்பு”
தாயகத்திலுள்ள உறவுகளுக்கு, அவர்கள் நம்பிக்கை இழக்கும் தருணத்தில், ஈழத்தமிழ் அகதிகள் ஆதரவு கொடுப்பது குற்றமல்ல.
சுவிட்சலாந்தே- பதிக்கப்பட்டவர்கள் மேல் குற்றம் சுமத்தாதே.
அல்லது
குற்றம் சுமத்தப்பட்ட ஈழத்தமிழருடன் கூட்டுணர்வை வெளிப்படுத்தும் சிறிய வீடியோவை – தனிப்படவோ அல்லது உங்கள் அமைப்பின் சார்பிலோ – எடுத்து,
இம் மின்னஞ்சல் முககவரிக்கு அனுப்புங்கள்: imrvbremen@gmail.com and we will put it in our website.
உங்கள் ஆதரவு – உங்கள் பங்கும் உங்கள் கருத்துக்களும் – எமக்கு தேவை. இத்தளத்தையும் பார்வையிடுங்கள்: www.humanrights.de