2018 யூன் 14ம் திகதி, பெலின்சோனாவில் அமைந்துள்ள சுவிட்சலாந்தின் மத்திய நீதிமன்றம், ஈழத்தமிழ் ஆர்வலர்களுக்கு எதிராக சுவிஸ் அரச வழக்கறிஞர் அலுவலகம் தொடுத்த வழக்கை முற்றாக மறுதலித்துள்ளது. சுவிட்சலாந்தின் முதன்மை பத்திரிகை ஒன்று (Tagesanzeiger) இதை இப்படி அறிவித்தது – ”குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்காக வாதாடிய வழக்கறிஞர் ஜியான் அன்றியா டென்யூசார், இத்தீர்ப்பை துல்லியமான, பலமான, தைரியமான தீர்ப்பு என்றும், இவ்வழக்கின் அரசியல் தாக்கங்களை பற்றி கருத்து சொல்ல நீதிமன்னறம் பயப்படவில்லை என்றும் விபரித்தார்”
இவ்வாண்டு சனவரி மாதம் இவ்வழக்கு ஆரம்பித்த நாளிலிருந்து, எமது இணையதளம், இவ்வழக்கின் ஆபத்தான அரசியல் தாக்கங்களை சுட்டிக்காட்டி வந்துள்ளது. உண்மை என்னவெனில், விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பாகவும் குற்றமிழைக்கும் அமைப்பாகவும் நிரூபிப்பதற்காக, அரசதரப்பு வழக்கிறஞர், சிங்கள பேரினவாதத்தின் மூர்க்கத்தனமான வாதங்களை முன்வைத்தார். நீதிபதிகள் இதை முற்றாக நிராகரித்துள்ளார்கள். தங்கள் முன் வைக்கப்பட்ட ஆதரங்கள், விடுதலைப்புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பாகவோ, குற்றமிழைக்கும் அமைப்பாகவோ முடிவு செய்வதற்கு தங்களை எடுத்துச்செல்லவில்லை என்று தீர்ப்பளித்துள்ளார்கள். மத்திய நீதிமன்றம் இதை ஆராய்வதற்கான இடமல்ல என்று தலைமை நீதிபதி, அரசதரப்பு வழக்கறிஞரை கண்டித்துள்ளார்.
சுவிட்சலாந்து உலக தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் முக்கிய ஆர்வலர்கள், சுவிஸ் தமிழர்களை சட்டத்திற்கு புறம்பான வழிகளில் வங்கிகளில் கடன்கள் எடுக்க வழி செய்துள்ளார்கள் என்ற தீர்ப்பை மட்டுமே நீதிபதிகள் வழங்கியுள்ளார்கள். முக்கியமான தலைவர்களுக்கு சிறையில்லாத தண்டனையும், சிறிய தொகை அபராதமுமே தண்டனையாக வழங்கியுள்ளார்கள். அரசதரப்பு வழக்கறிஞர் இவ்வழக்கை அரசிலாக்கியது தவறு என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு, பயங்கரவாதத்தை ஆதரித்ததற்காக, ஆறரை ஆண்டுகள் சிறை தண்டனை என்று அரசதரப்பு வாதாடியதை நீதிபதிகள் முற்றாக நிராகரித்து விட்டார்கள்.
தமிழ் ஆர்வலர்களை குற்றவாளிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்க அரசதரப்பு வழக்கறிஞர் அதிக வளங்களை செலவழித்துள்ளார். இவ்வழக்குக்காக, சுவிஸ் அதிரிகள், சுவிட்சலாந்தின் வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒரு வழக்கை, 4 மில்லியன் ஃபிராங்குகள் செலவு செய்து, முன்னெடுத்தார்கள்.
சுவிஸ் அரசதரப்பு வழக்கறிஞரின் வாதங்கள், கடுமையான சிங்கள் இனவாதியையும் வெட்கப்பட வைக்கும் வாதங்கள், உதாரணமாக, தாயத்தில் தங்கள் தமிழ் சகோதரர்கள் கொல்லப்பட்டதற்கு தமிழ் அகதிகளே காரணம் என்பன போன்ற வாதங்கள், சுவிஸ் ஊடகங்களிலும் கடந்த ஆண்டில் வந்துள்ளன. இவ்வழக்கு, சுவிட்சலாந்தில் வாழும் புலம்பெயர் தமிழ் சமூகத்தை மீளவும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
சில வாரங்களுக்கு முன்னர், ஒரு பிரபல சுவிஸ் ஊடகத்திற்கு, சுவிட்சாலாந்து வாழ்க்கைக்கு பழக்கப்பட்ட ஒரு இளம் தமிழர், பின்வருமாறு கூறியுள்ளார். ”பேருந்துகளிலும், ரயில் நிலையங்களிலும், வீதிகளிலும் நான் இதை உணர்கிறேன். என்னை ஒரு பயங்கரவாதியாக மக்கள் பார்க்கிறார்கள். ஆக என்னுடைய சுவிஸ் பாஸ்போர்ட்டிற்று எதுவித மதிப்பும் இல்லை….., எனக்கு சுவிட்சலாந்தை நன்றாக தெரியும் என்றே நான் நினைத்திருந்தேன். இப்போது அது ஏன் எனக்கு இவ்வளவு ஏமாற்றத்தை தருகிறது? என்னைப்பற்றிய எனது பிம்பத்தின் ஒரு முக்கியமான பகுதியை நிராகரித்து, எதற்காக எனது சுயமாரியதை பறிக்கப்படுகிறது?”
இத்தீர்ப்பினால் மட்டும், இவ்வழக்கின் அரசியல் நோக்கங்கள் நிறுத்தப்பட்டு விடாது. இருந்தாலும், இத்தீர்ப்பு, சுவிட்சலாந்திற்கும், ஏனைய நாடுகளுக்கும், முக்கியமாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு சக்தி வாய்ந்த செய்தியை சொல்கிறது. ஆரம்பத்தில், 2002 பேச்சுவார்த்தை மூலம் ஒரு தீர்ப்பை எட்டுவதற்கு இவர்கள் கொடுத்த மதிப்பான ஆதரவு நிலைப்பாட்டிற்கு இவர்கள் மீண்டும் திரும்ப வேண்டும் என்ற செய்தியை இத்தீர்ப்பு கொடுத்துள்ளது. இராணுவ தீர்ப்பை ஆதரித்த சர்வதேச சக்திகளுக்கும் இது ஒரு சரியான பதிலாகவும் அமைந்துள்ளது. இச்சர்வதேச சக்திகளுக்கோ, தங்கள் நிலைப்பாட்டை நிறுவுவதற்காக, தமிழர் தரப்பை குற்றவாளிகளாக்கி, 2009இல் நடந்த கொடூரங்களுக்கான குற்றத்தையும் தமிழர்கள் மேலேயே சுமத்த வேண்டிய தேவையுள்ளது. இத்தீர்ப்பு தாயகத்திலும், புலத்திலும் உள்ள ஈழத்தமிழர்களுக்கு ஒரு அரசியல் வெளியை உருவாக்கி கொடுத்திருக்கிறது.
ஆகாயத்திலிருந்து எமக்கு கொடுக்கப்பட்ட ஒரு வரமாக இத்தீர்ப்பை நாம் கணிக்க கூடாது. கடினமான ஒரு அரசியல்-சட்ட ரீதியான போராட்டத்தின் மூலமே இது கிடைத்துள்ளது.

இகுவடோரின் கூட்டொருமை.
முதலாவதாக, எமது வழக்கறிஞர்களின் திறமையான வாதங்களையும், இவ்வழக்கின் மேல் வெளிச்சம் பாய்ச்ச உதவிய, சர்வதேச அரசியல் கூட்டுணர்வையும் நாம் ஏற்று மெச்ச வேண்டும். இகுவடோரின் பூர்வகுடிகள் ஆரம்பத்திலேயு செல்ஃபி பிரச்சாரத்தில் எடுத்த பங்கு இதற்கு ஒரு முக்கியமான ஆரம்பமாக இருந்தது. மீண்டும், நான் சொல்கிறேன், 2016இல் கீற்றோ நகரில் முள்ளிவாய்க்கால் நாளை இவர்கள் நினைவு கூர்ந்து, இவர்களின் சமூகமே தமிழர் இனவழிப்பை முதன்முதலில் ஏறறுக்கொண்ட சமூகமாக உள்ளது.

மே-17 இயக்கம் செல்ஃபி பிரச்சாரத்திற்கு கொடுத்த அற்புதமான ஆதரவையும் நாம் ஏற்று மெச்ச வேண்டும். பாஸ்க் நாட்டு ஆர்வலர்கள், அயர்லாந்திலுள்ள ரோகிங்யா அகதிகள், உலகெங்கிலுமுள்ள ஆர்வலர்களின் கூட்டுணர்வும் இதற்கு இருந்தது. கொரியாவின் சமாதான இயக்கம், அங்கு தற்போது இடம்பெறும் வடக்கு, கிழக்கு கொரியா நாடுகளுக்கிடையே நடக்கும் பேச்சு வார்த்தைக்கும், 2002 சிறிலங்காவில் ஆரம்பித்த பேச்சுவார்த்தைக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை கண்டார்கள். இவர்கள் செல்ஃபி பிரச்சாரத்திற்கு கொடுத்த ஆதரவு ஒரு ஆழமான புரிதலில் இருந்து வந்தது. அதாவது வடக்கு, கிழக்கு கொரியா பேச்சுவார்தையை குழப்ப முயலும் அதே சக்திகளே சிறிலங்கா-தமிழீழம் பேச்சு வார்த்தையையும் குழப்பின என்பதை இவர்கள் புரிந்துள்ளார்கள். அன்று சிறிலங்காவில் ஜப்பானின் பங்கும் இன்று கொரியாவில் அதன் பங்கும் ஒரேமாதிரியாக இருப்பதையும் இவர்கள் அறிந்துள்ளார்கள்.

(எமது உண்மையான நண்பர்களில் தங்கியிருப்பதின் நன்மைகளை எமது அரசியல் பிரச்சாரம் எடுத்து காட்டுகிறது. இவர்களே தைரியமாக தம்மை முன்னிறுத்தினார்கள். இவர்கள் போன்றவர்களுடனான நட்பை வளர்ப்பதே எமது போராட்டத்தை முன்னெடுத்து செல்லும். பொய்யான நண்பர்கள், சக்தி வாய்ந்தவர்கள் போலவும் கவர்ச்சியாகவும் தெரிந்தாலும், ஒரு சர்வதேச அரசியல் வெளியை உருவாக்குவதற்கு இவர்கள் உதவ மாட்டார்கள்.
வழக்கின் ஆரம்பத்தில், சனவரி 16இல், தமிழர் தரப்புக்காக வாதாடிய வழக்கறிஞர், ஃபிலிப் கிராஃவ் பெலின்சோனா நீதிமன்றத்தை இவ்வாறு கேட்டார் –
”உங்கள் மறுப்புக்கான ஊக்கம் எனது கேள்விகளுக்கான ஊக்கத்தைவிட குறைந்ததே. ஏன் இந்த மறுப்பு? இதை நாம் எவ்வாறு புரிந்து கொள்ளலாம்? பொய்களால் கட்டப்பட்ட இக்கோபுரத்தில், நாம் எங்கே சென்றாலும், இந்த பிரமாண்டமான கோப்பில், நாம் எப்போதும் மூடப்பட்ட ஒரே கதவின் முன் வந்து நிற்கிறோம். இதை திறப்பதற்கு எவராலும் முடியவில்லை. இக்கதவை முடியே வைத்துள்ள அந்த சக்தி என்ன? இந்த நீதிமன்றத்தை விட அது சக்தி வாய்ந்ததா? எமது நாடாளுமன்றத்தை விட அது பலமானதா? உங்கள் மறுப்பை ஒரு நாலாவது சக்தி வழிகாட்டுகிறதா? நான் என்னையே கேட்கிறேன் – இது ஒரு அரசியல் வழக்கல்லவா?”
இந்த நான்காவது சக்தி பற்றிய ஆதரங்களை வெளிக்கொண்டு வருவதற்கு எமது அமைப்பு முயற்சிகள் எடுக்கும்.
விராஜ் மென்டிஸ் (சர்வதேச மனித உரிமை அமைப்பு பிரேமன்)
www.humanrights.de
15.06.2018