சந்திப்பை அறிமுகம் செய்து வைத்த விராஜ் மென்டிஸ், ஜேர்மனியில் அமைந்துள்ள மனித உரிமை அமைப்பான IMRV இச்சந்திப்பை ஒழுங்கு செய்ததின் பின்னணியை விளக்கினார். இப்போது நடந்து முடிந்த சுவிட்சலாந்து வழக்கு இங்கு மட்டும் நடக்கவில்லை. 2009 இனவழிப்பிற்கு பின்னர், ஐரோப்பாவில் தொடர்ச்சியாக நடந்த தமிழ் அகதிகளுக்கு எதிரான பல வழக்குகளின் ஒரு பகுதியாகவே இவ்வழக்கையும் பார்க்க வேண்டும். ஜேர்மனியிலும் சுவிட்சலாந்திலும் இடம்பெற்ற வழக்குகளை அவதானித்து வந்த IMRV அமைப்பு, இதற்காக பின்னணியை விளக்குவதற்கு மிகவும் பொருத்தமானது. இவ்வழக்கை முன்னெடுத்த அரசதரப்பு வக்கீல் கூறிய தமிழருக்கு எதிரான கருத்துக்கள், சுவிஸ் ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டதால், தமிழருக்கு எதிரான பதட்டமான அரசியல் சூழல் இங்கு உருவாகி இருப்பதாக மென்டிஸ் விபரித்தார். ஜேர்மன் வழக்கின் போது இவ்வாறு இருக்கவில்லை. சிறிலங்கா, லண்டன், சுவிட்சலாந்து மற்றும் தமிழ்நாடு (இந்தியா) ஆகிய இடங்களிலிருந்து வந்திருந்த ஊடக சந்திப்பு குழுவை அறிமுகம் செய்த போது, தமிழ்நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் பற்றியும் அங்கிருந்து வருகை தந்திருந்த திருமுருகன் காந்தி, அவரது அமைப்பு பங்குபற்றிக்கொண்டிருந்த போராட்டத்தை ஒரு முக்கியமான காலகட்டத்தில் விட்டுவிட்டு வந்திருந்ததாகவும் மென்டிஸ் குறிப்பிட்டார்.
இவ்வழக்கின் பின்னணியை விபரித்த அன்டி ஹிகின்பொத்தம், ஐக்கிய நாடுகள் (ஐநா) சபை அமைந்திருக்கும் இடம் சுவிட்சலாந்து என்பதையும், ஐநா தமிழர்களை பாதுகாப்பதில் தவறிவிட்டது என்று ஐநாவே ஒப்புக்கொண்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார். பிரித்தானியாவும் ஐ-அமெரிக்காவும் எவ்வாறு பேச்சுவார்த்தைகளை குழப்பவும் இறுதியில் அதை அழிக்கவும் வழி செய்தன என்பதையும், அதனால் தமிழருக்கு எதிரான ஒரு இனவழிப்பு நடந்தது என்பதையும் விளக்கினார். ஐ-அமெரிக்காவும், பிரித்தானியாவும், தமிழர் விடுதலை அமைப்பான விடுதலைப்புலிகளை தடைசெய்யும்படி, அவ்வாறு செய்வதற்கு விருப்பமில்லாத ஜேர்மனி போன்ற நாடுகளுக்கு அழுத்தங்கள் கொடுத்தன என்பதை அன்டி விபரித்தார். இறுதியில் ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகளை தடைசெய்த பின்னர், பிரித்தானியாவும் ஐஅமெரிக்காவும் விரும்பிய இராணுவ தீர்வு அமுலாக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையின் பின்னர், சுவிஸ் அரசு மட்டுமே, போரை நிறுத்தி, பேச்சுவார்த்தைகளை மீண்டும் நடத்துவதற்கு இடமழிக்ககூடிய ஒரேயொரு நாடாக கருதப்பட்டது. மே 2009இல் இனவழிப்பு உச்சத்துக்கு சென்றது வரையும், சுவிட்சலாந்து நேர்மையான மனச்சாட்சியுடன் எடுத்த பக்கசார்பற்ற நிலைப்பாட்டின் முக்கியத்துவத்தையும் டாக்டர் ஹிகின்பொத்தம் கோடிட்டுக் காட்டினார். பிரித்தானிய காவல்துறை (நிச்சயமாக பிரித்தானிய அரசின் ஆதரவுடன்), தமிழர்களை குற்றவாளிகள் ஆக்குவதற்காக எடுத்த நடைமுறையையும், இதன் மூலம் சுவிட்சலாந்து அரசவழக்கறிஞர்கள் தரப்பில் ஏற்படுத்திய தமிழர்களுக்கு எதிரான போக்கையும் விளக்கினார். இலங்கைதீவிலுள்ள தமிழர்களை மட்டுமல்ல, புலம்பெயர் தமிழர்களையும் குற்றவாளிகளாக்குவது என்ற பிரித்தானியாவின் கொள்கையை, பிரித்தானியா சுவிட்சலாந்தில் இவ்வாறு தலையீட்டதிலும் காணலாம். புலம்பெயர் தமிழர்களை குற்றவாளிகளாக்கி, சிறிலங்காவுக்கு எதிரான இனவழிப்பு குற்றசாட்டையும் அதற்கு துணைபோன நாடுகளுக்கு எதிரான குற்றச்சாட்டையும் தமிழர்கள் அம்பலப்படுத்துவை தடுப்பதே பிரித்தானியாவின் கொள்கையாக இருக்கிறது. இவ்வாறாக புலம்பெயர் தமிழர்கள் இனவழிப்பு என்று குற்றச்சாட்டு சொல்லுவதையே இங்கு குற்றமாக்கப்படுகிறது. சுவிட்சலாந்து அரசு, அது முன்னர் மனச்சாட்சியுடன் எடுத்த பக்சார்பற்ற நிலைப்பாட்டை மீண்டும் எடுத்து இருதரப்பு கருத்துக்களும் கேட்பதற்கான வெளியை உருவாக்குவதுடன், தமிழருக்கெதிரான குற்றச்சாட்டுகளை, தமிழர்கள் ஒரு இனவழிப்பை நிறுத்துவதற்கு எடுத்த நியாயமாக நடவடிக்ககளை குற்றமாக பார்ப்பதை கைவிடுமாறும் வேண்டினார்.
குற்றசாட்டப்பட்ட ஒரு தமிழரின் வழக்கறிஞரான, திரு மார்சல் பொஸோநெட், வழக்கின் சட்டரீதியான அடிப்படைகளைக் பற்றி பேசினார். விடுதலைப்புலிகள் ஒரு சட்டரீதியான அமைப்பு என்ற நிலையிலிருந்து அதை ஒரு தடுக்கப்பட்ட அமைப்பாக மாற்றுவதற்கான சுவிஸ் அரசதரப்பு முயற்சியே இதுவென்று விளக்கினார். சுவிஸ் அரசதரப்பு, விடுதலைப்புலிகளின் மேல் சுமத்தப்பட்ட குற்றங்களுக்கான முக்கியமான சாட்சியங்கள் என்று முன்வைப்பவை, ஐரோப்பாவிலும், ஐஅமெரிரிக்காவிலிலும் பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகளே. இக்கட்டுரைகள், சிறிலங்கா அரசின் நிலைப்பாட்டை எடுப்பவையாகவே இருக்கின்றன. சுவிட்சலாந்தில், தமிழர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருக்கும் இதே காலத்தில், ஐநா மனித உரிமைகள் தலைவர் போர்குற்றங்களை விசாரிக்க முன்மொழிந்த சர்வதேச கமிசனை அமைப்பதற்கு, சுவிட்சலாந்து அரச தரப்பு எதுவித முயற்சிகளும் எடுக்கவில்லை. தமிழ் அகதிகளை பெருமளவில் இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கு சிறிலங்கா அரசுடன் ஒப்பந்தங்கள் செய்யவும், சிறிலங்கா அரசுடன் சேர்ந்து சில பொருளாதார நடவடிக்கைகளை எடுப்பதிலுமே சுவிஸ் அரசு ஆர்வமாக உள்ளது. தமிழர் உரிமைகளுக்காக நீண்ட காலமாக வாதிட்டு வரும் திரு பொஸோநெட், தமிழர்களுக்கு எதிரான வழக்குகளை கைவிடும்படி சுவிட்சலாந்து அரச தரப்பிரை வேண்டினார்.
தமிழ்நாட்டின் மே-17 இயக்கத்தின் பிரதிநிதியான திருமுருகன், சுவிட்சலாந்து அரசு சர்வதேச விடயங்களில் பக்கசார்பின்றியும் சமாதானத்திற்காகவும் இயங்குவதில் புகழ் பெற்றது என்று தான் நம்பியிருந்ததாக சொன்னார். இனவழிப்பால் பாதிக்கப்பட்ட தமிழருக்கு எதிராக அது இத்தகைய ஒரு வழக்க முன்னெடுத்தது பற்றி தான் முதலில் கேள்விப்பட்ட போது அதிர்ச்சியாக இருந்தது என்றார். அவர் மேலும், சிறிலங்கா அரசு உணவும் மருந்தும் தமிழர் பகுதிகளுக்கு செல்வதை பல காலங்களில் தடைசெய்திந்த போது, புலம்பெயர் தமிழர்கள் அனுப்பிய நிதியின் உதவிடன் தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட்டார்கள் என்றார். தமது உறவுகளுக்கு புலம்பெயர் தமிழர்கள் அனுப்பிய நிதி உதவிகள் குற்றம் என்று வாதிடுவதன் மூலம், தமிழர் தாயகப் பகுதிகளில் வாழும் தமிழர்கள் மேல் இவர்கள் தாக்குதல் செய்கிறார்கள். ஏனெனில், தாயகப் பகுதிகளில் வாழும் தமிழர்கள், சிறிலங்கா அரசின் கீழ் நசுக்கப்படும்போது, பொருளாதார சுதந்திரம் உள்ள புலம்பெயர் தமிழர்களே அவர்களுக்கு ஆதரவு கொடுக்க கூடியவர்களாக உள்ளார்கள். இந்த உதவி குற்றமாக்கப்பட்டால், தாயகத் தமிழர்கள் எதிரிகளின் தயவிலேயே விடப்படுவார்கள். இவர் மேலும் சுவிட்சலாந்து அரசுக்கு உணர்ச்சியுடன் சில வேண்டுகோள்கள் விடுத்தார். வெகு தூரத்தில் இன்னுமொரு நாட்டில் இடம்பெற்ற சம்பவங்களை பற்றி, தெளிவான விசாரணைகள் இல்லாமல், சுவிஸ் அரசு எவ்வாறு ஒரு இங்கு வழக்கை முன்னெடுக்கலாம்? என்ன நடந்தது என்பது பற்றி ஒரு சர்வதேச விசாரணை கமிசன் அமைப்பதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல், சுவிஸ் கோர்ட்டில், முறையான ஆதரங்கள் இன்றி தமிழர்கள் மேல் எவ்வாறு ஒரு வழக்கை நடத்தலாம்? சுவிட்சலாந்தில் இடம்பெற்ற ஒரு நிதிசாரந்த வழக்கில், எவ்வாறு சுவிஸ் அரசு வேறொரு நாட்டில் வேறு இருதரப்பினருக்கு இடையே இடம்பெற்ற நிகழ்வுகள் பற்றிய தீர்ப்பை வழங்கலாம்? இன்னுமொரு நாட்டில் இடம்பெற்ற இருதரப்புக்கு இடையேயான நிகழ்வில், ஒரு தரப்புக்கு எதிராக முன்கூட்டியே எடுத்த தீர்ப்பை வைத்து, சுவிட்சலாந்தில் இடம்பெற்றதாக சொல்லப்படும் நிதிசார்ந்த குற்றச்சாட்டிற்கு அதை ஆதராமாக எப்படி வைக்க முடியும்? இன்னுமொரு நாட்டில் நடந்தது பற்றிய சரியான விசாரணை எதுவுமின்றி சுவிஸ் அரசு எவ்வாறு இதை செய்ய முடியும்?
திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிங்கள புத்த ஒற்றையாட்சி அரசால், தமிழர் சமூகமாக வட-கிழக்கில் வாழ்வதை சகிக்க முடியாது என்று ஆரம்பத்திலேயே விளக்கினார். இத்தகைய ஒரு சமூகம் இருப்பதை அழிக்கவே ஒரு இனவழிப்பு நடவடிக்ககை தேவைப்பட்டது. அவருக்கு முன்னர் பேசிய மூவரின் கருத்துக்களையும் ஆமோதித்தார். விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டு வன்னி பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களின் இருப்பையும் உயிர்களையும் பற்றிய சிறிலங்கா அரசின் நோக்கை அவர் திகைப்பூட்டும் விதத்தில் விபரித்தார். எட்டு மாதங்களாக தொடர்ந்த இறுதிகட்ட போரின் போது, 70,000 தமிழர்களே அங்குள்ளதாக சிறலங்கா அரசு சொல்லியது. இதனால் இத்தனை தொகை மக்களுக்கு தேவையான உலருணவுகளே இப்பகுதிக்குள் செல்ல விடப்பட்டன. மே 2009இல் போர் முடிவுக்கு வந்த பின், 300,000 மக்கள் உயிர்தப்பி வெளியே வந்தார்கள். 70,000க்கம் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு விட்டதால், அப்பகுதியில் உண்மையில் ஏறக்குறைய 400.000 மக்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், 70,000 மக்களே அங்குள்ளதாக சிறிலங்கா அரசு சொல்லி வந்தது. ஆக, இந்த 400,000 மக்களும், 70,000 மக்களுக்கான உலருணவுடனேயே பல மாதங்களாக அவலப்பட்டிருக்கிறார்கள். ஒரு பெரும் போர் நடந்த காலத்தில், சர்வதேச கவனம் சிறிலங்கா மேல் இருந்த காலத்தில், சிறிலங்கா அரசு இத்தகைய பொய்யை சொல்லி தப்ப முடியுமென்றால், அதற்கு முந்திய தசாப்தங்களிலும் அதற்கு பிந்திய ஒரு தசாப்த காலத்திலும், சிறிலங்கா மேல் சர்வதேசம் அதிக கவனம் செலுத்தாத காலத்தில், அது என்னவெல்லாம் செய்யும் என்பது பற்றி கற்கனை செய்து பார்க்கலாம். இக்காலங்களிலெல்லாம், புலம் பெயர் தமிழர்களின் உதவிகளே தமிழர் தாயகத்திலுள்ள தமிழர்களை பாதுகாத்தது. இப்பின்னணியில், தமது உறவுகளை பாதுகாப்பதற்கு முன்வந்தவர்களை குற்றவாளிகளாக்குவதன் அநீதியை இவர் கவனத்திற்கு கொண்டு வந்தார். திருவாளர்கள் பொஸோநெட் மற்றும் காந்தி ஆகியோர், புலம்பெயர் தமிழர்களை தாக்குவதை நிறுத்தி, தீவில் இடம்பெற்ற கொடுமைகளை விசாரணை செய்ய ஒரு சர்வதேச கமிசனை தொடக்குவதற்கு சுவிட்சலாந்து அரசு செயற்பட வேண்டும் என்று கேட்டதை, திரு பொன்னம்பலமும் வலியுறுத்தினார்.
ஊடக சந்திப்பு இடம்பெற்றுக்காண்டிருந்த போது, தமிழ்நாட்டில் செம்பு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை விரிவுபடுத்துவதற்கு எதிராக போராடிய மக்கள் மேல் நடைபெற்ற கொலை தாக்குதல் பற்றி செய்திகள் வந்து கொண்டிருந்தன. ஊடக சந்திப்பில், ஈழத்தமிழருக்காக உணர்ச்சிவசமாக பேசிய திமுருகன் காந்தி, சூழல் பாதுகாப்புக்கான இப்போராட்டத்திலும் நேரடியாக ஈடுபட்டவர். இத்தொழிற்சாலை, சுகாதாரத்திற்கும் சூழலுக்கும் பேரழிவுகளை கொண்டுவந்திருக்கிறது. இதன் கழிவுகள் மீன்பிடித்தல், விவசாயம் போன்ற தொழில்களுக்கும் மக்களின் ஆரோக்கியததிற்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரபூர்வமாக 13 போராடிய மக்கள் காவல்துறையின் துப்பாக்கி சூட்டினால் கொல்லபட்டுவிட்டாரக்ள என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் பாதிக்கப்ட்ட மக்கள் தொகை இன்னும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போராட்டத்தை ஒழுங்குபடுத்தியவர்களில் சிலரை, காவல்துறையினர் குறிபார்த்து சுட்டிருக்கிறார்கள். வேறு சிலர் கைதாகி தேசத்துரோக குற்றத்திற்காக சிறை வைக்கப்பட்டிருக்கிறாரகள். பிரித்தானியாவில் தலைமை செயலகத்தை கொண்ட வேதாந்தா கம்பனிக்கு இத்தொழிற்சாலை சொந்தமானது. இந்தியாவின் செம்பு தேவைகளை இதுவே அதிகமாக நிவர்த்தி செய்கிறது. இதனால் இத்தொழிற்சாலை அதிக கவனத்தை பெறுகிறது. தொழிற்சாலையை மூடும்படி தமிழ்நாடு அரசு முன்னர் கொடுத்த கட்டளைகளை, மேல் நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. திருமுருகன் காந்தியும் அவரது அமைப்பும் சுவிஸ் தமிழருக்கான பிரச்சாத்திற்கு ஆதரவு கொடுத்தார்கள். செல்ஃபி பிரச்சாரத்திலும் அதிகம் பங்கெடுத்தார்கள்.
3 யூன் 2018
IMRV (Internationaler Menschenrechtsverein Bremen e.V )