“பேய் நடைமுறை“

2018 சனவரி 8ம் திகதி, “பேய் நடைமுறை“ என்றழைக்கப்படும் ஒரு குற்ற விசாரணையை, உலக தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர்கள் மேல் சுவிட்சலாந்து நீதிமன்றம் ஆரம்பிக்கும். சுவிட்சலாந்து நாட்டின் வரலாற்றிலேயே மிகப் பெரியது என்று கருதப்படும் இந்த நீதிமன்ற விசாரணை ஒரு அரசியல் சாயலைக் கொண்டிருக்கிறது. Office of the Attorney General ஆல் சுமத்தப்பட்டு, சுவிட்சலாந்து  ஊடகங்களில் இக்குற்றச்சாட்டு பரப்பப்பட்டு வருகிறது. இவர்கள் தமது சகோதரங்களுக்கு பணம் அனுப்பியதாலேயே, 2009இல் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட மோசமான இப்போர் நீண்டு சென்றது என்பது இவர்கள் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டு. இதனால் இப்போரில் பல உயிர்கள் இறந்ததற்கு சுவிட்சலாந்து நாட்டின் புலம்பெயர் தமிழர் தலைவர்களே பொறுப்பு என்று குற்றம் சாட்டப்படுகிறார்கள். அதோடு புலம்பெயர் தலைவர்கள் விடுதலைப்புலிகளுடன் இணைந்து வன்முறை அச்சுறுத்தல் மூலம் பணம் வசூலித்து அனுப்பினார்கள் என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டிருக்கிறது.

இக்கருத்துக்கு எதிரான ஒரு கருத்தை முன்னிறுத்தி சுவிட்சலாந்தில் வாழும் தமிழர்கள் மத்தியில் ஒரு கையெழுத்து மனுவை முதலில் ஆரம்பித்து இருக்கிறோம். வெகு விரைவில் குற்றம் சுமத்தப்பட்டவர்களின் நேர்காணல்களையும் இக்குற்றச்சாட்டை எதிர்த்து நிற்க முன்வரும் ஏனையவர்களின் நேர்காணல்களையும் வெளியிடுவோம். இவை மனித உரிமைகள் என்ற கருப்பொருளின் ஆன்மாவையே தொடும் என்று நாம் நம்புகிறோம்.