முகப்பு வலைப்பதிவு
தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களுக்கு எதிராக யேர்மனி தொடுக்கின்ற வழக்குகள் மீது உங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்யுங்கள்!
சிறீலங்காவில்நடைபெற்றஅமைதிப்பேச்சுவார்த்தைக்கு,தாம்ஆதரவுவழங்கியவரலாறைஅழித்தொழிக்கும்யேர்மனியின்முயற்சியைஉடன்நிறுத்துங்கள்!
ஈழத்தமிழ்மக்களுக்குஎதிராகஅமெரிக்காவும்ஐக்கியஇராச்சியமும்முன்னெடுக்கின்றகுற்றவியல்கொள்கைகளுக்குயேர்மனியும்ஐரோப்பியஒன்றியமும்வழங்கிவரும்ஆதரவுக்குமுடிவுகட்டுங்கள்!
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு, 2007 – 2009 வரையான காலப்பகுதியில் ஆதரவு வழங்கியதற்காக பயங்கரவாதம்தொடர்பான சட்டத்தைப் பயன்படுத்தித் தமிழீழ ஆதரவாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கின்ற யேர்மனியின் செயற்பாடு, சிறிலங்காவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக்கு யேர்மனி வழங்கிய ஆதரவு பற்றிய வரலாற்றை முற்றாக இல்லாதொழிக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. விடுதலைப் புலிகளை வடக்கிலும் கிழக்கிலும் வாழ்கின்ற தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகளென அமைதிப் பேச்சுவார்த்தை அங்கீகரித்திருந்தது மட்டுமன்றி அந்தத் தீவில் வாழ்கின்ற அனைத்து மக்களுமே நீதியுடன் கூடிய அமைதியை அனுபவிக்கக்கூடிய ஒரு வாய்ப்பையும் அது உருவாக்கியிருந்தது. அதற்குப் பதிலாக தமிழீழ ஆதரவாளர்களைக் குற்றவாளிகளாக்க யேர்மனிமுன்னெடுக்கின்ற செயற்பாடு, 2009ம் ஆண்டில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தூண்டிய அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும் இணைந்து மேற்கொண்ட அணுகுமுறைக்கு இட்டுச்சென்றது மட்டுமன்றி, இன்றும் சிறீலங்காவில் இனவழிப்பு தொடரப்படுவதற்கு வழிவகுத்திருக்கிறது.
கடந்த 2022 ஏப்பிரல் மாதம் 27ம் திகதி டுசல்டோவில் (Düsseldorf) தொடங்கிய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நால்வருள் இருவரான நாதன் தம்பி மற்றும் ஆனந்தராஜா ஆகியோர் 'விடுதலைப் புலிகளுக்கு தாம் நிதி திரட்டியது குற்றம் அல்ல' என்றும் அதே வேளையில் விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கும் முயற்சியை எதிர்த்தும் வாதிடுகிறார்கள். அரசியல் அளவிலானதும் சட்டம்...
மூன்றாவது தடவையாக ஜேர்மனியிலிருந்து புறப்படும் நாடுகடத்தல் விமானப் பயணத்தை நிறுத்துங்கள்!
எதிர்வரும் செப்டெம்பர் 27ம் திகதி, திங்கட்கிழமை – ஜேர்மனியின் பொதுத்தேர்தல் நடைபெற்று முடிந்ததன் பின்னர் மூன்றாவது தடவையாக இலங்கையைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மக்கள் பெருமளவில் நாடுகடத்தப்படவிருக்கிறார்கள். அகதிகள் பலரை ஒன்றாகச் சேர்த்து ஒரு தொகுதியாக நாடுகடத்தும் நடைமுறை ஜேர்மனியில் முதற்தடவையாக இவ்வாண்டு, மார்ச் மாதம் 30ம் (March 30) திகதியும் இரண்டாவது தடவையாக ஜூன் மாதம் 9ம் (June 9) திகதியும் முன்னெடுக்கப்பட்டன.
ஜேர்மானிய அரசினால் நாளை மேற்கொள்ளப்படவிருக்கும் நாடுகடத்தல் நிகழ்வு, சிறீலங்காவுக்கு எதிராக ஜேர்மனி இணைந்து வரைந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்மானத்தைக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கப் போகிறது
சிறீலங்காவில் வாழும் தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த மக்களை ஓரங்கட்டுவதாகவும், சட்டத்துக்கு முரணாக மக்கள் தடுத்து வைக்கப்படுதல், சித்திரவதை மற்றும் கொடூரமான மோசமான நடைமுறைகள், மனிதநேயமற்ற, அவமானப்படுத்தும் நடைமுறைகள், தண்டனைகள், பாலியல் மற்றும் பாலினத்தை அடிப்படையாகக் கொண்ட வன்முறைகள் போன்றவற்றில் சிறீலங்கா அரசு ஈடுபடுவதாக அந்த அரசைக் குற்றஞ்சாட்டி, கடந்த மார்ச் மாதம் 30ம் திகதி, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் ஒரு தீர்மானத்தை மேற்கொண்டிருக்கும் இத்தருணத்தில், இதே தீர்மானத்தை இணைந்து யாத்த ஜேர்மானிய அரசு, சிறீலங்காவின் தமிழ்...
தமது நாட்டில் வதிகின்ற சில தமிழ் அகதிகளை அவசர அவசரமாக நாடுகடத்தத் தயாராகின்றது ஜேர்மனி
கடந்த சில நாட்களாக ஜேர்மனியில் வசித்து வருகின்ற ஈழத்தமிழர்களில் சிலரை விடியற்காலையில் மேற்கொள்ளப்படும் திடீர்ச் செயற்பாட்டில் அந்நாட்டுக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுவருகிறார்கள். கைது செய்யப்படுபவர்கள் எங்கே கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பது தொடர்பாக அவர்களது உறவினர்கள் எந்தவிதமான தகவலையும் பெறமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் அலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களது அனைத்துத் தொடர்பாடல்களும் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு வருடத்துக்கான விசாவைத் தருகிறோம் என்று சொல்லப்பட்ட செய்தியை நம்பி வெளிநாட்டவர்களின் காவல்துறைக்குச் சென்றவர்கள் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். மார்ச் மாதம் 30ம் திகதி ஒரு...
திருமுருகன் காந்தி ஜாமீனில் விடுதலை! ஆனால் அவர் மேலுள்ள குற்றச்சாட்டுகளும் வழக்குகளும் தொடர்கின்றன
அவருக்கு எதிரான எல்லா வழக்குகளையும் மீளப்பெறுக!
அக்டோபர் 2ம் திகதி செவ்வாய் கிழமை திருமுருகன் காந்தி ஜாமீனில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவருடைய உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் அவருடைய ஆதரவாளர்கள் அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். அவருடைய விடுதலைக்காக பல்வேறு வழிகளிலும் உழைத்த யாவருக்கும் எமது நன்றிகள். அரசியல் நோக்கத்துடன் அவருக்கு மேல் தொடரப்பட்டுள்ள எல்லா வழக்குகளையும் மீளப்பெறுமாறு தொடர்ந்து அழுத்தங்கள் கொடுக்கும்படி உங்களை வேண்டுகிறோம். முந்தைய பதிவுகளை பாருங்கள்…
மோடி அரசு சர்வதேச மனித உரிமை விதி முறைகளை மீறி திருமுருகன் காந்தியை சிறையிலடைத்திருக்கிறது. உபா குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் நிராகரித்தது!! அவரை விடுதலை செய்ய சர்வதேச அழுத்தம் தேவை.
அவரின் விடுதலையை வேண்டும் பிரச்சாரத்தில் இணையுங்கள்!
ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி பகல் 3.45 மணியளவில் பெங்களூரு சர்வதேச விமான நிலயத்தில் வைத்து திருமுருகன் காந்தி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். ஐநா மனித உரிமை கவுன்சிலில் (UNHCR) தூத்துக்குடி போராட்டக்காரர்களை நோக்கி காவல்துறை துப்பாக்கி சுடு நடத்தியதைப் பற்றி பேசியதற்காக மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டார் என்று இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டது. தனியாக அவரை வைத்திருந்த பின்னர் அவர் தமிழ் நாடு காவல்துறையிடம் கையளிக்கப்பட்டார். தமிழ்நாட்டில், அவரை 15 நாட்கள் தடுப்பு...
சுவிஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றில் ஒரு வெற்றி
2018 யூன் 14ம் திகதி, பெலின்சோனாவில் அமைந்துள்ள சுவிட்சலாந்தின் மத்திய நீதிமன்றம், ஈழத்தமிழ் ஆர்வலர்களுக்கு எதிராக சுவிஸ் அரச வழக்கறிஞர் அலுவலகம் தொடுத்த வழக்கை முற்றாக மறுதலித்துள்ளது. சுவிட்சலாந்தின் முதன்மை பத்திரிகை ஒன்று (Tagesanzeiger) இதை இப்படி அறிவித்தது – ”குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்காக வாதாடிய வழக்கறிஞர் ஜியான் அன்றியா டென்யூசார், இத்தீர்ப்பை துல்லியமான, பலமான, தைரியமான தீர்ப்பு என்றும், இவ்வழக்கின் அரசியல் தாக்கங்களை பற்றி கருத்து சொல்ல நீதிமன்னறம் பயப்படவில்லை என்றும் விபரித்தார்”
இவ்வாண்டு சனவரி மாதம் இவ்வழக்கு ஆரம்பித்த நாளிலிருந்து, எமது...
சுவிட்சலாந்து தமிழர் வழக்கு பற்றி சுரிச் நகரில் 25 மே 2018இல் இடம்பெற்ற ஊடக சந்திப்பும் தொடர்ந்த சில நிகழ்வுகளும்
சந்திப்பை அறிமுகம் செய்து வைத்த விராஜ் மென்டிஸ், ஜேர்மனியில் அமைந்துள்ள மனித உரிமை அமைப்பான IMRV இச்சந்திப்பை ஒழுங்கு செய்ததின் பின்னணியை விளக்கினார். இப்போது நடந்து முடிந்த சுவிட்சலாந்து வழக்கு இங்கு மட்டும் நடக்கவில்லை. 2009 இனவழிப்பிற்கு பின்னர், ஐரோப்பாவில் தொடர்ச்சியாக நடந்த தமிழ் அகதிகளுக்கு எதிரான பல வழக்குகளின் ஒரு பகுதியாகவே இவ்வழக்கையும் பார்க்க வேண்டும். ஜேர்மனியிலும் சுவிட்சலாந்திலும் இடம்பெற்ற வழக்குகளை அவதானித்து வந்த IMRV அமைப்பு, இதற்காக பின்னணியை விளக்குவதற்கு மிகவும் பொருத்தமானது. இவ்வழக்கை முன்னெடுத்த அரசதரப்பு வக்கீல் கூறிய...
பிரேமன் தீர்பாயத்தில் வழக்கை முன்னெடுத்தவர் பெலின்சோனா நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கின் பின்னணியை விளக்குகிறார்
(Kingston பல்கலைக்கழகத்தின் சர்வதேச அரசியல் பேராசிரியர் Andy Higginbottom, 2013 இல் பிரேமன் நகரில் இடம்பெயற்ற நிரந்தர மக்கள் தீர்பாயத்தின் சிறிலங்கா பற்றிய அமர்வின் வழக்கை முன்னெடுத்தவர். சுவிட்சலாந்தில் நடக்கும் தமிழருக்கெதிரான வழக்கின் பின்னணியை அவர் விளக்ககிய உரையின் சாரம்.)
சுவிட்சலாந்து, பெலின்சோனாவில் நடக்கும் வழக்கை இரண்டு எதிரெதிரான கோணங்களில் இருந்து புரிந்து கொள்ளலாம். எம்மை பொறுத்தமட்டில் இதன் அடிப்டையான விடயம் ”தமிழர்களுக்கு விடுதலை பெற உரிமை உள்ளதா?” என்பதே.
மனிதம் என்பதன் அடிப்படை மக்கள் உரிமைகளுக்காக போராட வேண்டும் என்பதே. தமிழர்களின் வரலாற்று அனுபவங்களை வைத்துப்...
எமது பிரச்சாரத்தில் இணையுங்கள்! செல்ஃபி அல்லது வீடியோ எடுங்கள்! கூண்டில் ஏற்றப்பட்ட ஈழத்தமிழரை ஆதரியுங்கள்!
சுவிட்சலாந்து அகதி ஈழத்தமிழருக்கான செல்ஃபி போராட்டம் -
இலங்கை தீவில் போர் நீண்டு சென்றதற்கும், அது கொடூரமாக நடத்தப்பட்டதற்கும் புலம்பெயர் தமிழர் காரணமா?
சுவிஸ் நீதிமன்றம் முடிவு செய்யும்.
2018 சனவரி 8ம் திகதி, சில ஈழத்தமிழர்களுக்கு எதிராக சுவிட்சலாந்தில் வழக்கு ஆரம்பமாகியது. சுவிட்சலாந்து வரலாற்றிலேயே மிகப்பெரிய வழக்காக கருதப்படும் இவ்வழக்கு ஒரு அரசியல் சாயலை எடுத்துள்ளது. சுவிட்சலாந்து Office of the Attorney General சர்ச்சைக்குரிய ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறது. சுவிட்சலாந்தில் வாழும் ஈழத்தமிழ் அகதிகள் நிதி சேகரித்து தாயகத்திற்கு அனுப்பியதால், அங்கு போர் நீடித்து,...