இலங்கை தீவில் போர் நீண்டு சென்றதற்கும், அது கொடூரமாக நடத்தப்பட்டதற்கும் புலம்பெயர் தமிழர் காரணமா?

இலங்கை தீவில் போர் நீண்டு சென்றதற்கும், அது கொடூரமாக நடத்தப்பட்டதற்கும் புலம்பெயர் தமிழர் காரணமா?

சுவிட்சலாந்து தமிழர் தலைவர்களுக்கு எதிராக இம்மாதிரியான ஒரு முரணான குற்றம் சுமத்தபட்டிருக்கிறது. வழக்கு இன்று பெலின்சொனா (Bellinzona) நகரத்தில் ஆரம்பமாகிறது.

பதினொரு மாதங்களுக்கு முன் Tagesanzeiger என்ற சுவிட்சலாந்து நாளிதழ் இவ்வாறு செய்தி வெளியிட்டது. ”மே 2009இல்”…. தமிழர்களுக்கு எதிரான ”பேரழிவுப் போர்” முடிவுக்கு கொண்டுவரப்பட்ட ”அதே மாதத்தில்”  மத்திய அரச வழக்கறிஞர்கள் விடுதலைப்புலிகளின் செயற்பாட்டாளர்களைப் பற்றி புலனாய்வு செய்ய ஆரம்பித்தனர். அவர்களின் குற்றச்சாட்டு: சுவிட்சலாந்து தமிழ் தலைவர்கள் நிதி அனுப்பியதால் போர் நீண்டு கொடூரமாக மாறியது.

மத்திய அரச வழக்கிறிஞர் அலுவலத்தின் நிலைப்பாடாக வெளியிடப்பட்ட இந்த ஊடக அறிக்கையை அவர்களும் மறுக்கவில்லை. ஆகவே, பெலின்சொனா நீதிமன்றம் இக்குற்றச்சாட்டிற்கு சாதகமாக தீர்ப்பளித்தால், அது அரசியல் ரீதியாக குழப்பமான விளைவுகளை உருவாக்கும்.  ”பேரழிவு போருக்கான” குற்றம் தமிழர் மீது சுமத்தப்படும்.

2009 பாரிய படுகொலைகள் சர்வதேச அரங்கில் மறைக்க முடியாதது. ஐநா செயலாளர் நாயகத்தால் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை 70,000 தமிழர்கள் இம்மாதங்களில் கொல்லப்பட்டார்கள் என்றது. பெலின்சொனாவில் குற்றத்தீர்ப்பு சிறிலங்கா அரசுக்கும் அதன் சர்வதேச ஆதரவு சக்திகளுக்கும் ஒரு பலமான பிரச்சார ஆயுதத்தை கையளிக்கும். தமிழர் இனவழிப்பு என்ற குற்றத்தை இவர்கள் மேல் சுமத்தும் போது, சுவிட்சலாந்து நீதிமன்றம் இது தற்கொலை போன்றது என்று தீர்ப்பளித்துள்ளது என்று இவர்கள் பதில் கொடுக்கலாம்.

இந்த மோசமான அநீதிக்கு எதிராக நாங்கள் போராடுவோம். பெலின்சொனாவில் Staatsanwalte தமது வாதத்தை முன்வைக்கும் போது, தமிழருக்கு எதிரான பேரழிவுப் போரருக்கு யார் உண்மையான குற்றவாளி என்ற வாதத்தை நாம் முன்வைப்போம். வழக்கை பற்றிய செய்திகளை தினமும் எமது இணைய தளத்தில் போட்டு வருவோம்.  அதே நேரத்தில், குற்றம் இழைத்ததாக சொல்லப்படும் காலமான 1999 இலிருந்து 2009 வரையான தசாப்தத்தில், உள்நாட்டிலும் வெளியிலும் என்ன நடந்தது என்பதை, உண்மையான தரவுகளை கொண்ட ஒரு காலவரிசையில், எமது இணைய தளத்தில் போட்டு வருவோம்.

தொடரும் வாரங்களில், நீங்கள் பங்கு பற்றவும் இடைவினையாற்றவும் மேலும் பல முன்னெடுப்புக்களை செய்வோம்.

இப்பக்கங்களை தொடர்ந்து கவனியுங்கள்

பிரேமன் சர்வதேச மனித உரிமை அமைப்பு

08.01.18